• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

இன்று 9 மாவட்டங்களில் லேசான மழை…

Byகாயத்ரி

Jul 20, 2022

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஜூலை 20), நாளையும் (ஜூலை 21) சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.