• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சரத்குமாரின் பிறந்தநாளுக்கு தேனியில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

Byvignesh.P

Jul 14, 2022

தேனி அருகே அல்லி நகரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் கட்சித் தலைவருமான நடிகர் சரத்குமாரின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட துணைத் தலைவர் அரசு பாண்டி தலைமையில், 68 கிலோ கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் தென்மண்டல பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொடி ஏற்றி, 68 வது பிறந்தநாளுக்காக 68 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் முக கவசம் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முருகன், வடக்கு மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.