• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ்-க்கு பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்- அண்ணாமலை

Byகாயத்ரி

Jul 14, 2022

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாவது விருதுநகரில் மனு கொடுக்க வந்த ஏழை தாயை, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், அவர் அளித்த மனுவை வைத்தே தலையில் ஓங்கி அடித்துள்ளார். இந்த வீடியோவை பாஜக வெளியிட்ட பின் அமைச்சரின் ஆட்கள் அந்த பெண்ணைச் சமாதனப் படுத்தி உள்ளனர். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

ஆளுநர் மாநில அரசுக்கு இடையூறாக இருப்பதாக அமைச்சர் பொன்முடியும் பேசி வருகிறார் இந்தி படித்தால் பானிபூரி தான் விற்க முடியும் என அரசியல் பேசியது யார்? ஆளுநர் ரவி, சனாதனத்தை பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? ஆளும் கட்சி அமைச்சர்கள், திராவிட மாடல் அரசு என்று பேசுவதை, அரசியலாக பார்க்காமல் கவர்னர் பேசுவதை மட்டும் ஏன் அரசியலாக பார்க்க வேண்டும்? தமிழகத்தையும், டெல்லியையும் இணைக்கும் நபராக, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளார். அவர், தமிழகத்தில் நடக்கும் எந்த விழாவிலும் பங்கேற்க உரிமை உண்டு.

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். ஓபிஎஸ் பாஜகவில் இணைந்தால் சேர்த்து கொள்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை பாஜகவின் கதவு எல்லோருக்கும் திறந்தே உள்ளது. எங்களுக்கு யார் மீதும் விருப்பு வெறுப்பு கிடையாது என கூறியுள்ளார்.