• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆச்சரியம் தரும் ஆமைகளின் அற்புத வாழ்க்கை

ByAlaguraja Palanichamy

Jun 28, 2022

தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.இவ்வூரில் ‘ அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும். பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். பிச்சாவரம் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. அத்தகைய அலையாத்தி தாவரங்கள் கொண்டதே பிச்சாவரம் காடு. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் போல மிக நீளமாக இருக்கும்.
இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன.செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதற்கு அந்த காலகட்டத்தில் இயற்கையாகவே சுற்றுப்புறத்தில் அதிகரிக்கும் இரை உயிரினங்களே காரணம். மேலும் வெளிநாடுகளில் இருந்து வலசை வர பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்கு குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.
ஒரு ஆமை அதிகபட்சம் 190 முட்டை யிடம் குறைந்தபட்சம் 90 முட்டை யிடம் கடல் மணல் கரையில் மணல் தோண்டி பள்ளம் பறித்து முட்டையே முடிவைத்து விட்டு செல்கிறது .” இதனை நாய் தெரியாமல் சாப்பிட்டு விடும். மீனவர்கள் ஒரு சிலர் தெரியாமல் ஆமை முட்டை எடுத்து சாப்பிடுவர்கள், இரவோடு இரவுவாக அதிகாலையில் 1 மணி முதல் 6 வரை முட்டை வனத்துறையில் வேலை பார்க்கும் ஆட்கள் இரவு டார்ச் லைட் வைத்து ஆமை கடற்கரை ஒரம் கால் மிதியே வைத்து ஆமை முட்டை எடு பார்கள் பின்பு அதனை குஞ்சு பொரிபகம் 20 சென்ட் வேலி அமைத்து ஆமை முட்டையே எடுத்த இடத்தில் எவ்வுளவு ஆழம்மோ, அகலம்மோ, அதை ஆழம், அகலத்தில் வைத்து மேல உள்ள முட்டை கீழ் உள்ள முட்டை அப்படியே முட்டை போட்ட இடத்தில் இருந்த மணல் எடுத்து போய் புதிதாக உள்ள இடத்தில் அதை மணலை வைத்து.48 நாள் முதல் 54 நாட்களில் குஞ்சு பொரிக்கும். ஒவ்வொரு குழிக்கும் தகவல் பலக்கை ஸ்டிக்கர் ஒட்டப்படும் ஆண்டுக்கு 48000 ஆமை முட்டை எடுப்பார்கள் GPS /GNSS முலம் கணக்கிடப்படும் 48 நாள்லில் குஞ்சு பொறித்து பள்ளம் அரை அடி ஆகிவிட்டால் குஞ்சு பொறித்து உள்ளது என்று அர்த்தம். இந்தியாவில் மொத்தம் 5 வகையான ஆமைகள் தமிழ் நாட்டிலும் 5 வகை ஆமைதான் உள்ளது.

ஆமையின் பெயர்: 1)சித்தாமை ஆமை(Olive Ridley) 2)பெருந்தலையாமை (Logger head) 3)பேராமை (Green Turtle): ஆலிவ் பச்சை – பழுப்பு நிறத்தில் இருக்கும் 4) தோணியாமை (அ) ஏழு வரி ஆமை (Leatherback Turtle): 5) அழுங்கு ஆமை (Hawksbill Turtle) ஐந்து வகையான ஆமை பெயர்கள் இவை.ஒரு வகையான ஆமை மட்டும் முட்டை போடுது அது தான் சித்தாமை (அ) பங்குனி ஆமை (Olive Ridley): இந்தியாவில் முட்டையிடும் ஆமைகளில் அளவில் சிறியது. அதிக எண்ணிக்கையில் நமது கடற்கரைகளுக்கு வந்து முட்டையிடுகிறது. ஆமை. ஆமைக்குக் கடமம் என்ற இன்னொரு பெயருண்டு. மிக்கக் கடுமையான் ஓடுகளை உடையது ஆமை. ஆகவே அதற்கு மற்றொரு பெயரை வைத்தவர்கள், கடு (கடுமை, கடியது) என்ற அடிச்சொல்லி னின்றும் ஒரு பெயரை அமைத்தது மிக்க அழகிதேஆகும்.‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍இந்தியாவில் அதிகமாக முட்டை போடும் முதல் மாநிலம் ஒரிசா, இரண்டாவது மாநிலம் மாக தமிழ்நாடு உள்ளது. குஞ்சு பொரித்தவுடன் அதனை கடலில் விட்டு விடுவார்கள். ஆமையே பாதுகாப்பது காரணம் என்னவென்றால் கட லில் வாழும் மீன்களுக்கு எதிரிகள் பாஞ்ச் மற்றும் அணிமுன் போன்ற உயிரினங்கள் மீன் குஞ்சுகளை சாப்பிடும் மீன்களை கடல்களில் மீன்களை வளர விடாது. அதனால் ஆமைகளை கடலில் விடுவதால் அதனை சாப்பிட்டு விடும் மீன் வளம் பெருகும். மீன் தொழிலில் ஈடுபடும் பல குடும்பங்கள் இதனை நம்பி வாழ்கின்றன. இந்த வகையான ஆமைகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை ஆகும்.


அழகுராஜா பழனிச்சாமி

சமூக சிந்தனையாளர், நிலத்தடி நீர் ஆய்வாளர் மற்றும் புவியியல் பேராசிரியர். முதுமுனைவர்.