• Sat. Apr 20th, 2024

நெய்வேலி பழுப்பு நிலக்கரியின் கதை

ByAlaguraja Palanichamy

Jun 29, 2022

மதிய நேரத்தில் Mines – I, பழுப்பு நிலக்கரி அல்லது லிக்னைட் (Lignite or Brown Coal), 25% முதல் 35% வரையில் கரிமம் கொண்ட மிருதுவான, பழப்பு நிறத்தில் பழுப்பு நிலக்கரி பகுதிகளை சுற்றி பார்த்தேன், கிட்ட திட்ட 300 அடிக்கு அடியில் பழுப்பு நிலக்கரி (Lignite Coal) உள்ளது. 1957 ஆண்டு மதிப்புமிகு. ஐயா.செம்புலிங்க முதலியார் காடுகளில் அதிகப்படியான விவசாயம் செய்து கொண்டு இருந்தார். விவசாயம் செய்வதற்கு போதும்மான அளவு தண்ணீர் இல்லை. இதனால் கிணற்று போர்வெல் போடுவதற்கு ஏற்பாடு செய்தார் போர்வெல் போடும் போது அடியில் கருப்பு நிறமாக வந்துள்ளது. உடனே ஐயா.ஜம்புலிங்க முதலியார் அவர்கள் தமிழக அரசிடமும் தகவலை தெரியப்படுத்தினர். பின்பு தமிழ் நாடு அரசின் முதலமைச்சர் ராக கர்ம வீரர். காமராஜர் இருந்தார். அவர் இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது .அப்போது மாநில ஆட்சியில் இருந்த கர்ம வீரர் காமராஜர் தமிழகத்தில் சுரங்கத்தை தோண்டுவதற்கு தேவையான கருவிகள் வாங்குவதற்கு போதும் மான நிதி தமிழக அரசிடம் இல்லை என்று கர்ம வீரர்.காமராஜர் காலத்தில் பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை தோண்டுவதற்கு மத்திய அரசிடமும் கூறியுள்ளார் மத்திய அரசு ஆய்வு செய்து பார்த்து போது அப்போதுதான் தெரிந்து இருக்கிறது பழுப்பு நிலக்கரி ( மின்சாரம் இதிலிருந்து தயாரிக்க பயன்படும் என்று கண்டுபிடித்தனர் புவியியல் ஆய்வாளர்கள் இதற்கு சொந்தகாரர் . ஐயா. மா. ஜம்புலிங்கம் முதலியார் தனது சொந்த 600 ஏக்கர் நிலத்தை அரசுக்கு கொடுத்து உள்ளார். அப்போது முதலமைச்சர் ராக 1957 மற்றும் 1962 தேர்தல்களில், கர்ம வீரர்.காமராஜரே மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதலமைச்சர்ராக இருந்தார்.
நிலக்கரியில் பழுப்பு நிலக்கரி என்பது ஒரு வகையாகும். சாதாரண நிலக்கரியை விட பழுப்பு நிலக்கரி சற்று கடினத் தன்மை குறைந்ததாகும். எளிதில் தூளாகும் தன்மை கொண்டதால் இக்கரியை நீண்ட காலத்திற்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்த இயலாது. பூமிக்குள்ளிலிருந்து தோண்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியில் 60 சதவிகிதம் நீர் அடங்கியுள்ளது. எனவே, இந்நீரைப் போக்கத் தூளாக்கிப் பின் கரிக்கட்டிகளாக உருமாற்றுகின்றனர். இதுவே ‘லிக்கோ கரி’ ஆகும். இக்கரி எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதாகும்.

என் புகைப்படத்திற்கு பின்னால் தெரிவது தான் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் பகுதி ஆழம் 300 அடி கொண்டது.


பழுப்பு நிலக்கரி இந்தியாவில், தமிழ் நாட்டில் நெய்வேலியில் அதிக அளவு வெட்டி எடுக்கப்படுகின்றது. வெளிநாடுகளிலும் பழுப்பு நிலக்கரி உள்ள நாடுகள் அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, தென்மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது பயன்படுத்துவது முதல் அனல்மின் நிலையம்வரை வெப்பம் பெற எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
(Afforestation is the planting of trees in a previously barren environment. Deforestation is the destruction of trees and forests for human habitation and use. Afforestation has a beneficial effect on the environment. )
(Deforestation has a detrimental effect on the environment.)
Afforestation மண் எடுத்த நிலக்கரி எடுத்த பிறகு 10 மீட்டர் இல்லாத இடத்தில் 10 மீட்டர் உயரத்தில் மண்ணை அந்த இடத்தில் மண்ணை போட்டு விடுவார்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மண் செட்டான பிறகு ( Fertile Soil) மண் உருமாற்றம் செய்யப்பட்டு உழுது விவசாய நிலமாக 200 ஹெக்டர் இடம் மீண்டும் விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது. அவ்விடத்தில் விவசாயம் செய்யும் அளவிற்கு மண் வளம் பெருகி உள்ளது.
ஜெயங்கொண்டம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை போன்ற இடங்களில் பழுப்பு நிலக்கரி அதிகமாக உள்ளது ஆனால் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளன.

Afforestation செய்யப்பட்ட இடம்.இந்த புகைப்படம் தான் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட இதனை மாற்றுவதற்கு 3 முதல் 5 ஆண்டு வரை செட்டான பிறகு 200 ஹெக்டர் நிலம் விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது


ஆகையால் அந்த இடத்திற்கு கோடி கணக்கில் பணம் கொடுக்க வேண்டி இருக்கும் அப்படி கொடுத்தால் நிலம் எடுப்பு முலம் நிலம் கையாகப்படுத்தப்பட்டாலும் பழுப்பு நிலக்கரி எடுப்பதால் லாபம் கிடையாது ஆகையால் தற்போது அரசின் நிலைப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
31.03.2022 நிலவரப்படி சுரங்கம்(Mines – I) ஒன் றில் 380 மில்லியன் டன் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது, சுரங்கம் I ரில் 3600 ஹெக்டர் உள்ளது.சுரங்கம் (Mines – I A) வில் 57 மல்லியன் டன் எடுக்கப்பட்டுள்ளது. I A வில் 2000 ஹெக்டர் உள்ளது. சுரங்கம் (Mines – II) வில் 340 மில்லியன் டன் எடுக்கப்பட்டுள்ளது. சுரங்கம் II வில் 7000 ஹெக்டர் உள்ளது. இந்த இடங்களில் பழுப்பு நிலக்கரி மட்டும் எடுக்கப்படுகிறது.
மற்ற மாநிலம் மான ஒரிசாவில் 2000 ஹெக்டர் அளவில் நிலக்கரி மட்டும் (Only Coa| ) ஒரிசாவில் 7.5 மில்லியன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது மற்றும் ராஜஸ்தானில் 15 மில்லியன் டன் நிலக்கரி எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 1000 ஹெக்டர் நிலக்கரி உள்ளது.10 லட்சம் டன் என்றால் 1 மில்லியன் 1 டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், முபச: 513683 ) இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பு 600 ஏக்கர் நிலம் கொடுத்த
ஐயா. மா. ஜம்புலிங்கம் முதலியார் பெயரை சேர்த்து. ஐயா மா. ஜம்புலிங்கம் முதலியார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் நிறுவனம் என்று பெயர் சூட்டி இருந்தால் இன்னும் சிறப்பு வாய்ந்தாக இருக்கும் என்று மக்களின் கருத்து.தமிழகத்தில் உள்ள மக்கள் இன்னும் தமிழகத்திற்கும்,இந்திய அரசாங்கத்திற்கு அதிகப்படியான நிலங்களை தானமாக கொடுக்க மக்கள் முன் வந்து இருப்பார்கள். வாழ்க தமிழ்நாடு, வளர்க இந்தியா ஜெய்ஹிந்த்


பேராசிரியர்.
முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி,
நிலத்தடி நீர் மற்றும் புவியியல் ஆய்வாளர்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *