• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர் உயிலை சுட்டிக்காட்டி ட்விட் செய்த கே.சி.பழனிச்சாமி..!

Byவிஷா

Jun 27, 2022

அ.இ.அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பொதுச்செயலாளர் பதவியை நெருங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முட்டுக்கட்டை போட பல்வேறு திசைகளிலும் ஓ.பி.எஸ் முயன்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, முதலில் டெல்லிக்கு சென்ற அவர் அடுத்ததாக தமிழக முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதுமட்டுமின்றி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு போட்டியாக நாளை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இபிஎஸ்ஸ{க்கு முக்கால்வாசி கட்சி துணை நிற்பதால்; ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்துவிடுவார் என்றே பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் உயிலை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், எம்ஜிஆர் எழுதிய உயிலை பகிர்ந்து, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் 18.01.1987அன்றைய தேதியில் அதிமுகவில் உள்ள உறுப்பினர்களில் 80சதவீதம் பேர் ஆதரவை பெற்றவர்கள் தலைமையில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் எம்ஜிஆர் தொண்டர்களால் ஒரு தலைமையை தேர்ந்தெடுப்போம்.
நிச்சியமாக அது இந்த சுயநலவாதிகளும்,அடிமைகளும்,ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.