• Sat. Sep 23rd, 2023

ஓ.பி.எஸ் சுயநலத்துக்காக சாதியை பயன்படுத்துகிறார்..,
திருச்சி குமார் குற்றச்சாட்டு..!

Byவிஷா

Jun 27, 2022

ஓ.பி.எஸ் சுயநலத்திற்காக சாதியைப் பயன்படுத்துகிறார் என இ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான குமார் குற்றம்சாட்டியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற அதேவேளையில், திருச்சியில் இ.பி.எஸ் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தமது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது..,
“ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்”. ஓபிஎஸ், தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும், ஒரு நன்மையும் செய்ததில்லை. தற்போது அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த 19 பேர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அவர்களில், 2 பேர் தவிர மற்ற, 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஜாதி மதம் பாராமல் பணியாற்றுவார் என்று நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் தொண்டர்களின் செல்வாக்கை இழந்து விட்டனர். மக்களின் ஆதரவும் அவர்களுக்கு இல்லை. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது. 95 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர். உதிரிகள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அவர்களும் விரைவில் உதிர்ந்து போவார்கள்.
ஓ.பி.எஸ்-ம், அவரது மகனும் திமுகவுடன் நேரடியாகவே தொடர்பு வைத்துள்ளனர். அவர்கள் திமுகவை வெளிப்படையாக பாராட்டுவதை கண்டு தொண்டர்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.
வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் தமிழகத்தில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். ஓபிஎஸ், தினகரன், சசிகலா சுற்றுப் பயணங்களால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது” என்று கூறினார்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *