• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனியில் இபிஎஸ்- ஐ கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்

Byvignesh.P

Jun 23, 2022

M. முருகேஸ்வரி Ex கவுன்சிலர் ADMK இணைச் செயலாளர்

சென்னையில் இன்று நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது ஆதரவாளர்களுடன் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவமரியாதை செய்தும் அவமதித்தும் உள்ளனர்.

கூட்டத்தின் முடிவில் வெளியேறிய ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அட்டைகளை கொண்டு தாக்கியும் உள்ளனர். ஓபிஎஸ் பிரச்சார வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

இந்நிலையில் தகவலறிந்த தேனி மாவட்டம் போடி நகர அதிமுகவினர் கட்டபொம்மன் சிலை அருகில் ஓபிஎஸ் – க்கு ஆதரவாக அதிமுகவினர் இபிஎஸ்- ஐ கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்திய எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் போடி நகர காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து செல்ல கூறினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.