• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டனர்

ByA.Tamilselvan

Jun 23, 2022

அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று நடைப்பெற உள்ளது. அதில் பங்கேற்கஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் புறப்பட்டனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். இவருக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்து வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் கோமாதா பூஜை நடத்தி வழிபட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டார். இவர்களை வரவேற்பதற்காக தொண்டர்கள் சாலை எங்கும் சூழ்ந்துள்ளனர். இந்நிலையில் மதுரவாயல், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டுள்ளனர். மேலும், புழல்- தாம்பரம் வெளிவட்ட சாலையில் இருந்து கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.