• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் வாகனஓட்டிகள் அதிர்ச்சி

ByA.Tamilselvan

Jun 21, 2022

மதுரை பொன்மேனி பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுரை 68வது வார்டுக்கு உட்பட்ட பொன்மேனி பிரதான சாலையில் சுமார் 4 அடிக்கு மேல் மண்சரிவு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக மதுரை பொன்மேனி பிரதான சாலை அதிகமான குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும் சாலை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மேலும் விபத்து ஏற்படாதவாறு, பள்ளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர் பள்ளம் விழுந்த இடத்தில் தற்போது மாநகராட்சி சார்பில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.