• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் நடமாடும் பஞ்சர் கடையில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

Byவிஷா

Jun 19, 2022

துத்துக்குடியில் நடமாடும் பஞ்சர் கடையில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வேலன் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (47). இவருக்கு திருமணமாகி சங்கரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். தூத்துக்குடி 3ம் மைல் அருகில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இன்று அதிகாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள அவரது கடையில் மர்மமாக இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், டவுன் உதவி காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தீஸ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கருப்பசாமி மரணத்திற்கான காரணம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.