• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவரை வேட்பாளராக நிறுத்துங்கள் -திருமாவளவன்

ByA.Tamilselvan

Jun 14, 2022

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் வரும் ஜுலை மாதம் 19-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அப்பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி புதிய குடியரசு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
பாஐகவும் ,எதிர்கட்சியினரும் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.பாஐக இஸ்லாமியரையோ,அல்லது பழங்குடி இனத்தை சேர்ந்தவரையோ நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்கட்சிகள் பொதுவேட்பாளரை தேர்வுசெய்ய முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் கிறிஸ்தவரை வேட்பாளராக நிறுத்துங்கள் எனவலியுறுத்தியுள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியாவில் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த எவரும் குடியரசுத்தலைவராக இருந்ததில்லை.பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் ,வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும் இது அமையும் என்று கூறியுள்ளார்.