• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கலைஞர் நூலகம் கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டார்

ByA.Tamilselvan

Jun 8, 2022

மதுரையில் 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுற்ற கலைஞர் நினைவு நூலக பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
இடம் தேர்வு செய்யப்பட்ட போது நேரில் பார்வையிட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், கட்டுமான பணிகளை நேற்று மாலை முதல் முறையாக நேரில் பார்வையிட்டார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, அன்பில் மகேஷ், மூர்த்தி, பெரிய கருப்பன், ஆட்சியர், ஆணையர் ஆகியோர் இந்த ஆய்வின் போது கலந்து கொண்டனர்.