• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே வெடி விபத்து; ஒருவர் மரணம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்வின் தெருவில் முத்தையா என்பவரது வீட்டில் சட்ட விதவிதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்படி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சண்முகராஜ் (52) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.