• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ், தெலுங்கில் டப் ஆகும் பிரபல சீரிஸான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்…

Byகாயத்ரி

May 26, 2022

நெட்பிளிக்ஸின் பிரபல சீரிஸான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தமிழிலும் தெலுங்கிலும் டப் ஆக உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்போது அவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்பிளிக்ஸில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்ற சீரிஸ் சினிமா ரசிகர்கள் இடையே வெகு பிரபலம். இதையடுத்து அந்த சீரிஸை தமிழிலும், தெலுங்கிலும் டப் செய்து வெளியிட உள்ளது நெட்பிளிக்ஸ். இதையடுத்து இது சம்மந்தமான ஒரு ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜா நடத்துனராக இருக்க, அவரின் குழுவினர் வாசிக்கும் இந்த இசை தற்போது இணையத்தில் பரவலாக கவனிக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.