பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. வேலாயுதம், சச்சின், வசீகரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான இவர், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.