• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

போராட்டம் நடத்த கடு்ம் கட்டுப்பாடு விதித்த இஸ்லாமிய எமிரேட்

By

Sep 9, 2021 ,

ஆப்கானில் தலிபான் அரசுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டம் நடத்த கட்டுப்பாடுகளை விதித்தும், மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஆப்கான் அரசின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தான் ( இஸ்லாமிய எமிரேட் ) மற்றும் கபூலில் போராட்டம் என்ற பெயரில் சிலர் பாதுகாப்பை சீர் குலைத்து வருகிறார்கள். ஆனால், இனிமேல் போராட்டமோ, ஆர்ப்பட்டமோ, நடத்த எந்த அனுமதியும் இல்லை என ஆப்கான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை சட்டத்தின் படி போராட விரும்பினால் இஸ்லாமிய எமிரேட் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

குறிப்பாக போராட்டம் நடத்துவத்திற்கான நோக்கம், எழுப்பப்படும் கோஷம் , போராட்டம் நடத்தவுள்ள இடம், தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றை சம்மந்த பட்ட அதிகாரிகளிடம் 3 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும். ஆப்கான் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கும் , அரசியல் சூழ்ச்சியை முன்னெடுபவர்கள் மீதும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.