• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பிராமணர்களுக்கு எதிராக பேசிய முதல்வரின் தந்தையையே கொத்தாக தூக்கிய போலீஸ்!

By

Sep 8, 2021

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பூபேஷ் பாகெல் முதல்வராக உள்ளார். இந்தநிலையில் அண்மையில் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தையான நந்தகுமார் பாகெல், கிராம மக்கள் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்து கிராம மக்களிடமும் ஒன்றை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பிராமணர்களை உங்கள் கிராமத்துக்குள் அனுமதிக்காதீர்கள். நாம் அனைவரும் பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர்களை மீண்டும் வோல்கா நதி பகுதிக்கே திருப்பி அனுப்ப வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையானது. சர்வ பிராமணர்கள் சமாஜ் என்ற அமைப்பு, நந்தகுமார் பாகெலின் சர்ச்சை கருத்து தொடர்பாக சத்தீஸ்கர் காவல்துறையிடம் புகார் அளித்தது. இதனைத்தொடர்ந்து நந்தகுமார் பாகெலினை கைது செய்தனர்