• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

ByA.Tamilselvan

May 11, 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2,2ஏதேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுக்காண ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் இம்மாதம் 21ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.இந்தத் தேர்வுகளுக்கு பிப் 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.முதல்நிலைத் தேர்வுகள் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்பட உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை 11 லட்சம் பட்டதாரிகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விட இந்த ஆண்டு 60 விழுக்காடு பட்டதாரிகள் அதிகமாக விண்ணப்பித்து இருப்பதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அறிவிக்கை எண்‌: 03/2022, நாள்‌ 23.02.2022-ன்‌ வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு – || (நேர்முகத்‌ தேர்வு பதவிகள்‌ மற்றும்‌ நேர்முகத்‌ தேர்வு அல்லாத பதவிகள்‌) (தொகுதி -|| மற்றும்‌ தொகுதி IIA) பதவிக்கான முதல்‌ நிலைத்‌ தேர்வு (கொள்குறிவலை) 21.05.2022 முற்பகலில்‌ மட்டும்‌ நடைபெற உள்ளது.தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்‌ (Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளமான www.tnpsc.gov.inமற்றும்www.tnpscexams.in-ல் பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.