• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ByA.Tamilselvan

May 10, 2022

மதுரை மாநகராட்சி தொழிலாளர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துப்பரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க மாநில அமைப்பாளர் பூமிநாதன் , சி, ஜ, டி, யூ சங்கம் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம்தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் சங்கம் அம்ச ராஜ், ஆகிய சங்க பொறுப்ப்பாளர்கள் கலந்துகொண்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் மாநகராட்சி நிர்வாக ஆணனயரை கண்டித்தும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும்.நிரந்தர பணியாளர்களை ஏழாவது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்கவும். கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்கள் பணி செய்து பொது மக்கள் உயிரை காத்த பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்தபடி நிவாரணமாக ரூபாய் 15,000 உடனே வழங்கிடு இதுபோன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட துப்பரவு பணியாளர்கள் கலந்து .கொண்டனர்.ஆர்ப்பாட்டம் காரணமாக மதுரை முழுவதும் துப்பரவு பணி நடைபெறவில்லை இதனால் மாநகரம் முழுவதும் குப்பைகள் மலைபோல் தேங்கிகிடந்தன .