• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இலவச கல்வி மாணவர் சேர்க்கை….

Byகாயத்ரி

May 4, 2022

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மொத்தம் உள்ள 8,100 தனியார் பள்ளிகளில் உள்ள 1.10 லட்சம் இடங்களில் சேர இதுவரை 65,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள பெற்றோர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் https://rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.