• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

நடிகர் அஜய் தேவ்கன்- இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம்

ByA.Tamilselvan

Apr 28, 2022

நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடக தலைநகர் பெங்களூரில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்ரம் ராணா’ பட புரோமோஷன் விழாவில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில்,இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். இந்த படங்களை தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள்” என கூறியிருந்தார். இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த இந்த விவாதம் இந்தியா முழுவதும் எதிரொலிக்க துவங்கியது. இதனால் டுவிட்டரில் இந்திக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துகள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டது.
இந்நிலையி்ல பெங்களூரில் இன்று கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுப்டடனர். பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிளில் திரண்ட அவர்கள் இந்தி மொழிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் தேசிய மொழி இந்தி கிடையாது என அவர்கள் கூறிய நிலையில் நடிகர் அஜ்ய் தேவ்கனுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து கைது செய்தனர்.