• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

எல்ஐசி பங்கு வெளியீட்டு தேதியை ஒத்திவைப்பு…

Byகாயத்ரி

Apr 28, 2022

எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்து எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு தேதி மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு மூலம் ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒரு பங்கின் விலை 902 ரூபாயிலிருந்து 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீடு மே 9-ஆம் தேதி நிறைவடையும். பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது . பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் வரையிலும், சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 40 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. துவக்கத்தில் அரசிடம் உள்ள 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 3.5 சதவீத பங்கை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது.