• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்

ByA.Tamilselvan

Apr 26, 2022

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கிற்கு ட்விட்டரை விற்க நிர்வாகக் குழு சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ட்விட்டரை எலன் மஸ்க கைப்பற்றியுள்ளார் எனலாம்.
ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார்.ட்வீட்டர் குறித்து சில விமர்சனங்களையும் அவர் தெரித்து வந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க்.
சமீபத்தில் ட்விட்டர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 11 பேர் அடங்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அதையடுத்து, ட்விட்டர் மற்றும் மஸ்க் என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன்படி, 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் இப்போது வெளியாகவில்லை. தற்போது ட்விட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பராக் அகர்வால் தனது ஊழியர்களிடம் பேசும் போது ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது என பேசியதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளன.