• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஆரோக்கியக் குறிப்புகள்:

Byவிஷா

Apr 23, 2022

பலாப்பழம்:
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம், உடனடி ஆற்றலைத் தரக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே சாப்பிடலாம். நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் ஏ, சி, கே ஆகியவையும் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும். கரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பலாக்காயை சாம்பார் வைத்துச் சாப்பிடலாம். பலாக்கொட்டையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. பலாப்பழம், மலச்சிக்கலுக்கான சிறந்த நிவாரணி. உணவுக்குழாயில் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு.