• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சூப்பர்மேனாக ஜெய் நடிக்கும் படத்திற்கு ஒரு கோடியில் விமான அரங்கம்

ஜெய் நடித்து வரும் சூப்பர்மேன் படம் பிரேக்கிங் நியூஸ். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பறக்கும் விமானத்தின் மீது ஜெய் வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது.

இதற்காக சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் 1 கோடி ரூபாய் செலவில் சரக்கு விமானத்தின் பிரமாண்ட செட் ஒன்றை அமைத்துள்ளனர். கோலி சோடா போன்ற படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் எல்.எம்.மகேஷ் இந்த செட்டை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் ஆண்ட்ரூ கூறியதாவது: ஒரு பழைய பயணிகள் விமானத்தை நாங்கள் சரக்கு விமானமாக மாற்றினோம். உட்புறம் முழுமையாக மாற்றப்பட்டது மற்றும் வெளிப்புற பகுதிகளுக்கு குறைந்த அளவு மாற்றங்களைச் செய்துள்ளோம். விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் வெளிப்புறத்தின் சில பகுதிகளையும் மாற்றியுள்ளோம். கதைப்படி இந்த விமான சண்டை காட்சி 2025ல் நடப்பதால் அதற்கேற்ப விமானத்தை நவீனமாக்கி உள்ளோம்.

படத்தின் நாயகி பானு ரெட்டியை வில்லன்கள் ஒரு சரக்கு விமானத்தில் கடத்துகிறார்கள். அவரை ஜெய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் காட்சி. இதனை முதலில் கிராபிச்சில்தான் உருவாக்க இருந்தோம். ஆனால் தயாரிப்பாளர்கள் காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இந்த ஏற்பாட்டை செய்தார். இதில் ஜெய் டூப் போடாமல் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களில் இப்படியொரு ஆக்ஷன் காட்சியில் நடித்ததில்லை என்று அவரே கூறினார். சண்டை காட்சியை சண்டை இயக்குனர் டேவிட் வடிவமைத்தார், ஒளிப்பதிவாளர் செவிலோ ராஜா பதிவு செய்தார். என்றார்.