• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்வருக்கு வாழ்த்து சொன்ன பா.ரஞ்சித்!

இந்தியாவின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவநாள் ஆக கொண்டாட, பிறப்பித்துள்ள ஆணையை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என பா.ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார்.

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவநாள் ஆக கொண்டாட, பிறப்பித்துள்ள ஆணையை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்! தமிழக முதல்வருக்கு மகிழ்ச்சியும்! வாழ்த்துகளும்!’ என பதிவிட்டுள்ளார்.