அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்விக்கு பிறகு சிம்பு சினிமாவில் தொடரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாநாடு திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது! இந்த திரைப்படத்தை அடுத்து கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிம்பு ஈசிஆரில் ஒரு பிரம்மாண்டமான பங்களாவை கட்டிவருகிறார். இந்த பங்களா கட்டி முடித்தப்பிறகுதான் திருமணம் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.