• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஆயிரம் கோடிப்பே! வசூல் மழையில் ஆர்.ஆர்.ஆர்.!

ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் அணைத்து மொழிகளும் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை நேற்று படக்குழுவினர் மும்பையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அதற்கான புகைப்படங்களும் நேற்று இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான நாளிலிருந்து தற்போது வரை 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் மற்றும் கேஜிஎப் திரைப்படம் வெளியாகும் வரை ஆர்ஆர்ஆர் படத்திற்கு வரவேற்பு குறையாது. இதனால் வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.