• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சம்பளத்தில் பாதியை திருப்பித்தந்த பிரபாஸ்!

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், சச்சின் கடேகர், சத்யராஜ், ஜெயராம், பிரியதர்ஷி, ஜெகபதி பாபு, முரளி சர்மா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

ஆனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம். இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், நடிகர் பிரபாஸ் தனது சம்பளத்தில் 50 கோடி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபாஸ் இந்த படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.