• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கமல் ஹீரோ.! ரஜினி வில்லன்! -இதுவே என் கனவு!

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி படத்தைத் தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் ஆர்ஆர்ஆர் படத்தை போல் தமிழில் எந்த நடிகர்களை வைத்து இயக்குவீர்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ராஜமௌலி ” கமல் சார் மற்றும் ரஜினி சார்!! கமல் சார் தான் ஹீரோ! ரஜினி சார் வில்லன்! அதுவும் என் கனவு..எப்போதும் அதைப் பத்தியும் யோசிப்பேன்” என சிரித்து கொண்டே கூறியுள்ளார்.