• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வைரலாகும் சந்தானத்தின் புகைப்படம்!

நடிகர் சந்தானம் தற்போது மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்ட்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டைட்டிலுடன் வெளியானது. விறுவிறுப்பாக நடந்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டப்பிங் பணியில் சந்தானம ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.