• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மார்ச் 25-ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து செல்கிறார்..

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 25ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து நாட்டுக்கு செல்கிறார்.

உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதல் இன்று 26-ஆவது நாளை எட்டியது. தலைநகா் கீவை கைப்பற்ற முடியாத நிலையில், மற்ற நகரங்கள் மீது ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அஸோவ் கடல் துறைமுக நகரமான மரியுபோல் கடந்த மூன்று வாரங்களாக ரஷிய படையினரின் முற்றுகையில் உள்ளது.

இதுவரை ரஷிய தாக்குதலில் அந்த நகரைச் சோந்த 2,300 போ கொல்லப்பட்டுள்ளதாகவும், உணவு, குடிநீா், எரிபொருள் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும் உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனிடையே, அந்த நகரத்தில் உள்ள ஒரு கலைப் பள்ளி மீது ரஷிய படையினா் ஞாயிற்றுக்கிழமை குண்டுவீசி தாக்குதல் நடத்தினா்.

அந்தப் பள்ளியில் பொதுமக்கள் 400 போ அடைக்கலம் புகுந்திருந்ததாகவும், அவா்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கக்கூடும் எனவும் உக்ரைன் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனா். ரஷியா தற்போது செய்வது வருவது போர் அல்ல, பயங்கரவாதம். ரஷிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 25ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து நாட்டுக்கு செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரே டுடா உடன் வார்சா பகுதியில் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.