வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானாவுக்கு சொந்தமாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சொகுசு விடுதியில் போதை விருந்து நடந்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் விருந்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அவர்கள் ஹோலி பண்டிகையை ஒட்டி விருந்து நடைபெற்றதாக கூறியுள்ளனர். போதைப்பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படாத நிலையில், விருந்தில் பங்கேற்ற இளைஞர்களை, போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாக்கு சொந்தமான ஆர்ச்சிட் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1 மணி முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட்ட நிலையில் மது விருந்தில் கலந்துகொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் சிறைபிடித்து வைத்தனர்.
மேலும் தகவல் அறிந்த வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலாளா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடைபெறுவதாகவும், விதிமீறல் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)