• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ராதே ஷ்யாம்?!?

300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் ராதே ஷ்யாம்! ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால், படத்தின் ஓப்பனிங் சுமாராக உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன. படத்தில் விஷுவலை தவிர வேற ஒன்றுமே நல்லா இல்லை என்றும் பேசப்படுகிறது.

பாகுபலி, சாஹோ திரைப்படங்களின் முதல் நாள் வசூலை ராதே ஷ்யாம் படம் முந்தவில்லை எனக் கூறப்படுகிறது. டோலிவுட்டிலேயே ராதே ஷ்யாம் திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் 5 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என்றும் இந்தியில் வெறும் 4 கோடி தான் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் மார்ச் 25ம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் எப்படி இருக்கப் போகிறதோ? எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் அள்ளுமா? என்பதை நோக்கி ஒட்டுமொத்த திரைத்துறையே காத்திருக்கிறது.