தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். பின்னர் தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம், இப்படை வெல்லும், எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தேவராட்டம் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோவான கௌதம் கார்த்திக்குடன் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மஞ்சிமா மோகன் பிறந்தநாளை முன்னிட்டு, கெளதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் போன்ற ஒரு வலிமையான, அருமையான பெண் எனது வாழ்க்கையில் இருப்பது பெருமையாக உள்ளது. எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அப்போ காதல் உண்மை தானோ? என கருத்து கூறி வருகின்றனர்.
