• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கட்டிய கணவனை வெட்டிக்கொன்ற மனைவி… விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Murder

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் மில்லில் வேலை செய்து வந்த பிரபுவுக்கும், அவரது மனைவி உமா மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கணவன் பிரபுவை உமா மகேஸ்வரி வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக உமா மகேஸ்வரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கொலை வழக்கில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சம்பவத்தின் போது பிரபு மதுபோதையில் இருந்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறியதாக தன்னை அடிக்கடி மிரட்டி வந்ததாகவும், அதன் காரணமாகவே கணவர் பிரபுவை கொலை செய்ததாகவும் உமா மகேஸ்வரி தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.