• Sat. Apr 27th, 2024

தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்… விக்கிரமராஜா எச்சரிக்கை!

vikrama raja

புதுக்கோட்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விக்கிரமராஜா வணிகர்கள் கடைகளில் குட்கா பான்பராக் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது மீறினால் தமிழக அரசு அவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும் நிலை ஏற்படும் என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா கூறுகையில்: அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது ஏற்க முடியாது. இதுபோன்ற பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் டீசல், பெட்ரோல் மற்றும் சுங்க கட்டணத்தை மத்திய அரசு உடனடியாக குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

சுங்க கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும் வெளிப்படைத் தன்மையோடு எவ்வளவு தொகை வசூல் செய்யப்படுகிறது எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது என்பது குறித்த பலகை சுங்கச்சாவடிகளில் வைக்கப்பட வேண்டும். இதே போன்று தற்போது வணிகர்கள் மீது காவல்துறை பிசிஆர் சட்டத்தை உபயோகபடுத்தி வருகிறது. இதனால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் பலர் உணவு அருந்திவிட்டு சரக்குகள் வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் ரவுடித்தனம் செய்கிறார்கள் இதனை வணிகர்கள் தட்டிக் கேட்கும் போது பல பகுதிகளில் பிசிஆர் வழக்கு போடப்படுகிறது. இதனை காவல்துறையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வேட் வரியினால் பல வணிகர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் பேரமைப்பு கோரிக்கை வைத்த பின்னர் அந்த வழக்கை சமரச தீர்வு மூலம் தீர்வு காண்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதற்கு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த காலங்களில் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளவர்கள் மட்டுமே வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்ய முடியும். ஆனால் தற்போதைய தமிழக அரசு அதை நீக்கி அனைத்து வணிகர்களும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு கோரிக்கைகளை கேட்டு பரிசீலனை செய்து வருகிறது நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வணிகர்களுக்கு அறிவித்துள்ளனர் இதற்கு நன்றியை தெரிவித்துக கொள்கிறோம். எங்களுடைய கோரிக்கைகள் தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *