• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..

Byகுமார்

Mar 9, 2022

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டி யிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும்  மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில்  சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு,கீழையூர் உள்ளிட்ட பகுதிகலிருந்து  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்று அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.

அதனை அடுத்து கிராமத்தின் சார்பில் துண்டு  வீசப்பட்டு பிறகு அனைவரும் கண்மாயில்  ஒன்றாக இறங்கி தங்கள் கையில் வைத்துள்ள மீன் கூடைகள், வலைகள், கச்சா, உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்து அசத்தினார்.

மேலும் பிடிபட்ட  மீன்களான கெலுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி, உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து அசத்தினர். மேலும் பிடிபட்ட மீன்களை முதலில் இறைவனுக்கு படைத்து பின்பு தாங்கள் அருந்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதில் சமூக ஆர்வலர் பூமிநாதன், பிரபு சிவகுமார் கருப்புசாமி  ராஜ பிரபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்..