• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

என்னுடைய நிஜப் பெயர் வேற.. – சூரி

தமிழில் இப்பொழுது முன்னணி காமெடியனாக உள்ளவர் நடிகர் சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தீபாவளி, பீமா என உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலையை காட்டி சினிமாவின் மீதுள்ள காதலால் கோடம்பாக்கத்தில் சுற்றி திரிந்த சூரிக்கு வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சி ரொம்பவே ஃபேமஸ் ஆனது. அதன் பிறகு அனைவரும் இவரை புரோட்டா சூரி எனவே அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து சூரி நடித்த அனைத்து திரைப்படங்களும் அவரது காமெடிகளும் ரொம்பவே ஃபேமஸ் ஆகி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டுள்ளார்.

சூரி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்ணாத்த படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூரிய அதில் சூரி என்பது தன்னுடைய நிஜ பெயர் இல்லை என்பதை பகிர்ந்துள்ளார்.

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சூரி ஒரு இரட்டையர் ஆவார். எனவே இவரின் இயற்பெயர் ராம் லக்ஷ்மன் என வைக்கப்பட்டுள்ளது. சிறுவயது முதலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப் பெரிய ரசிகரான இவர் தளபதி படம் ரிலீஸ் ஆகும் போது அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியின் கதாபாத்திரம் சூர்யா என தன்னுடைய பெயரையும் சூர்யா என சினிமாவிற்காக தனக்குத்தானே மாற்றிக் கொண்டார். பின் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது போற போக்கில் அந்த பெயர் சூர்யா என்பது மாறி சூரி என மாறிவிட்டது. இந்த சுவாரசியமான தகவலை அண்ணாத்த சிறப்பு நிகழ்ச்சியில் சூரி பகிர்ந்துள்ளார்.