• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சருமத்தில் இறந்த செல்களை நீக்க..

மாதத்திற்கு ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை.

இறந்த செல்களை செயற்கையாக பணம் கொடுத்து ரசாயனக் கலப்புகளுடன் இருக்கும் அவற்றை பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடிக்கடி உங்கள் சருமத்திற்கு இவ்வாறான செயற்கை ரசாயனம் ஊட்டப்பட்ட கலவையை தருவது உங்கள் சருமத்தின் இயல்பை மாற்றி வறண்டு சுருக்கங்கள் வர வைத்து விடும்.

க்ளென்சிங் முறைக்கு காய்ச்சாத பால் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டுக்கள், கிளிசரின் 10 சொட்டுக்கள் இதனை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனை பஞ்சின் மூலம் தொட்டுக்கொண்டு அழுத்தமாக முகத்தை துடைக்கவும். இதுவே எளிமையான க்ளென்சிங் முறை.

ஸ்க்ரப்பிற்கு பழுத்த பப்பாளி பழம், அன்னாசி பழம், ஸ்டராபெரி பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்

எண்ணெய்பசைக்காரர்களுக்கு ஸ்டராபெரி நல்லது. இதனை மிக்சியில் போட்டுக் கூழாக்கவும். தண்ணீர் விட வேண்டாம். அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைத்தூள் மற்றும் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்ட வடிவில் தேய்க்கவும். இதனால் இறந்த செல்கள் எளிதாக நீங்கும். முகம் பளபளக்கும். இதனை கைகள் கால்கள் என எல்லா இடத்திலும் தேய்க்கலாம்.

மேலே குறிப்பிட்ட மூன்று பழங்களான பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்டராபெரி பழங்கள் இறந்த செல்களை நீக்கும் என்சைம்களை மூலமாகக் கொண்டவை. வாரம் இருமுறை இப்படி ஸ்கரப் செய்வதால் முகப்பொலிவு மேம்படும். கரும்புள்ளிகளும் மறையும்.