• Sun. Apr 28th, 2024

இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி!…

By

Aug 22, 2021

இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி சாம்சங் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவருகிறது. 720×1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிறது.

5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனம் ரூ.20,000-விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *