• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ரஷ்யா வழியாக மாணவர்களை மீட்கும் பணி…

Byகாயத்ரி

Mar 3, 2022

உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிகமான மாணவர்கள் தங்கி இருப்பதால், அவர்களை ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.