• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?..

By

Aug 21, 2021

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.24 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.34 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,652 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 968 பேர் ஆண்கள், 684 பேர் பெண்கள்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 99 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 19ஆயிரத்து 391ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 286 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 23பேர் உயிரிழந்துள்ளார். 4பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 19 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 686ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,859பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 45ஆயிரத்து 178ஆக அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.