• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழக பாஜக மூத்த தலைவர் ஆளுநராக நியமனம்!…

By

Aug 22, 2021

தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் இல.கணேசன். தஞ்சையைச் சேர்ந்த 76 வயதான இல.கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாக பதவி வகித்தவர். பாஜக தேசிய குழு உறுப்பினராக உள்ளார்.

இத்தகைய அரசியல் அனுபவம் கொண்ட இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மாணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல.கணேசன் அம்மாநிலத்திற்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.