நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
ஓ.எம்.ஆர். படிவம் பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம். நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்.12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.