• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நெகடிவ் கமெண்ட்ஸை ஓரம்கட்டிய வலிமை வசூல்!

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு, ஒரு பக்கம் நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தாலும், மறுபக்கம் வசூலை கொதித்து வருகிறது! இந்நிலையில், சென்னையில் வலிமை திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் கடந்த 24- ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம், வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. சில நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் படம் தாறுமாறாக வசூல் செய்து வருகிறது.

அந்த வகையில், வெளியான முதல் நாளே உலகளவில் 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் திரைப்படம் வெளியான 4 நாட்களில் சென்னையில் மட்டும் 5.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 1.47 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.