• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

26ஆம் தேதி தொடங்க உள்ளது ஐபிஎல் தொடர்…

Byகாயத்ரி

Feb 25, 2022

55 லீக் சுற்று போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில் மற்றும் நவிமும்பையில் உள்ள ப்ரோபர்ன் ஆகிய 3 மைதானங்களில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதர 15 லீக் போட்டிகள் புனே நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளதாக தெரியவருகிறது. தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் மற்றும் குரூப் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் 14 லீக் சுற்றுப் போட்டிகளில் மோத உள்ளன. அதில் ஒரு அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 4 போட்டியிலும் மற்றும் டிஒய் பாட்டில் மைதானத்தில் 4 போட்டியிலும் விளையாட உள்ளது.

அத்துடன் நவி மும்பையில் உள்ள ப்ராபர்ன் மைதானத்தில் 3 போட்டியிலும் மற்றும் புனே நகரில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் 3 போட்டியிலும் ஒரு அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிளே ஆப் சுற்று போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 2 மாதங்கள் நடைபெற உள்ள தொடரின் மாபெரும் இறுதி போட்டி வரும் மே 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிகிறது.