• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெரியாரின் வேடமணிந்து நடித்த சிறுவனுக்கு முதல்வர் வாழ்த்து..

Byகாயத்ரி

Feb 24, 2022

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒன்றில், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் பெரியார் வேடத்தில் நடைபெற்ற நாடகம் ஒன்று ஒளிபரப்பானது.

அந்த நாடகத்தில், பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா? என பல கேள்விகளுக்க விடையளிக்கும் விதமாக அந்த நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, பெரியாரின் வேடமணிந்திருந்த சிறுவன், “கடவுள் மறுப்பு என்பது என்னுடைய கொள்கையே இல்லை. எல்லோரையும் சமமா நடத்தனும்ங்கிறது மட்டும் தான் என்னோட எண்ணம்”போன்ற வசனங்களையும், பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்து பேசியிருந்தனர். இந்த நிலையில் ‘தந்தை பெரியார்’ வேடத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து உரையாடினார். சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சிறுவர்கள் தங்கள் கதாபாத்திரை மீண்டும் முதல்வர் முன்பு நடித்து காட்டி, திருவள்ளுவர் சிலையையும் பரிசாக பெற்றார். முதல்வரின் இந்த நெகிழ்ச்சி சந்திப்பு தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.