• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திமுக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை

சென்னையில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த மதன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காந்தி நகரில் மறைந்த திமுக நிர்வாகியின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் அமைச்சர் சென்ற பின்னர் திமுக நிர்வாகி மதனை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் மதனின் உடலை மீட்டு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தேர்தல் முன் விரோதம் காரணமாக மதன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.